ஒடிசாவில் ரயில் பெட்டிகள் பின்னோக்கி ஓடிய விவகாரம்: 7 பேர் பணியிடை நீக்கம்

Published:

express rail odisha without engine driver - 2026ஒடிசாவில் ஆமதாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் பின்னோக்கி ஓடிய விவகாரத்தில் ரயில்வே ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் இல்லாமல் 10 கி.மீ., தொலைவுக்கு ஓடிய விவகாரத்தில் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ரயில் அகமதாபாத்தில் இருந்து பூரி நோக்கிச் சென்றது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் இஞ்சின், ஒடிசாவின் திட்லாகர் ரயில் நிலையத்தில் வேறு பெட்டிகளை இணைப்பதற்காக கழற்றப்பட்டபோது பெட்டிகள் மட்டும் தனியாகக் கழன்று ஓடின.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் காயமில்லை என்ற போதிலும், சுமார் 10 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக ரயில் தானாக ஓடிய செய்தி வெளியாகி, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த ரயில் பாதையில் வேறு ரயில்கள் வராத அளவுக்கு அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் மாற்றுஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.. எனவே பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையில் ஊழியர்களின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து இது தொடர்பில் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்து வரும் ஒரு மாதம் ரயில்வே பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

தானாகக் கழன்று ஓடிய ரயிலின் காட்சியை ஒருவர் படம் பிடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்…

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img