பழங்குடியினப் பெண்ணுக்கு காலணி வழங்கி, கீழே குனிந்து மாட்டியும் விட்ட மோடி!

இந்தியா சற்றுமுன்

picture modi - 2026

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் இந்திய நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதல் நலவாழ்வு மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது, பழங்குடியினப் பெண்களுக்கு காலணிகள் வழங்கும் விழாவில் வயதான பெண்மணிக்கு கீழே குனிந்து காலணிகளை மாட்டியும் விட்டார்.

மத்திய பட்ஜெட்டின் போது இந்திய நலவாழ்வுத் திட்டம் என்னும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் நலவாழ்வு மையங்கள் அமைப்பதும், 10கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒரு குடும்பத்துக்கு 5லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்குவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

நடப்பு நிதியாண்டில் நலவாழ்வு மையங்கள் அமைக்க ஆயிரத்து இருநூறு கோடி ரூபாயும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பத்தாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் அமைக்கப்பட்ட முதல் நலவாழ்வு மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பழங்குடியினப் பெண்களுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். அப்போது பெண் ஒருவருக்கு காலணிகளை மோடி வழங்கினார். கீழே குனிந்து, காலணிகளை அந்தப் பெண்மணிக்கு மாட்டி கொள்ள உதவி புரிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய நலவாழ்வுத் திட்டம் என்பது சேவைகளை அளிப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பங்களிப்புடன் நலமான, திறமுள்ள, புதிய இந்தியாவை உருவாக்குவதாகும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.