ராணுவ கண்காட்சியைப் பார்வையிட திரண்ட மக்கள்: 3 லட்சம் பேர் பார்வையிட்டு சாதனை

army - 2026

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்ற பாதுகாப்பு துறை கண்காட்சியை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். கண்காட்சியை ஒட்டி நடைபெற்ற முப்படையினரின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

சென்னை அருகே  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  திருவிடந்தையில் கடந்த11 ஆம் தேதி முதல் இந்திய பாதுகாப்புத் துறையின் கண்காட்சி நடைபெற்று வந்தது. 41 நாடுகள் பங்கேற்ற கண்காட்சியில் போயிங், ஏர்பஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த   நிறுவனங்களும்  அரங்குகளை அமைந்திருந்தன. கண்காட்சியின் இறுதி நாளான சனிக்கிழமை அன்று பொது மக்கள் பார்வையிட  அனுதிமதிக்கப்பட்டனர். விடுமுறை நாள் என்பதால் அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்தனர்.

காட்சி அரங்குகளில் பாதுகாப்பு நலன் கருதி சாதாரண வகை துப்பாக்கிகள், இயந்திர துப்பாகிகள், ராணுவ உடைகள், குண்டு துளைக்காத ஆடை, தொப்பிகள் போன்ற பொது மக்கள் பார்க்க விரும்பிய பல்வேறு பொருள்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. எனினும் கண்காட்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.  கண்காட்சியின் சிறப்பம்சமாக முப்படை வீரர்கள் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.

கண்காட்சி நிறைவு விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றதால், காலதாமதாக பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பார்வையாளர்கள் குவிந்ததால், திருவிடந்தை முதல் திருவான்மியூர் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ.தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

கூட்டம் அலைமோதியதால் பிற்பகல் 2 மணிக்கு பிறகு அரங்குகளை காலி செய்ய தொடங்கிவிட்டனர். மேலும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையன்றே காலி செய்து விட்டனர். இதனால் சனிக்கிழமையன்று பிற்பகலுக்கு மேல் வந்தவர்கள் அனைவரும் கண்காட்சியை முழுமையாகக் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 5 போர்க் கப்பல்களை சனிக்கிழமை இன்று மட்டும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். இதற்காக, சென்னை தீவுத் திடலில் இருந்து காலை 8 மணி முதல் 20 அரசு பேருந்துகள் மற்றும் 15 தனியார் பேருந்துகள் சென்னை துறைமுகத்துக்கு இயக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நாளையும் காலை 8 மணி முதல் போர் கப்பலை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் பாதுகாப்புத்துறையின் ராணுவத் தளவாடக் கண்காட்சி கடந்த 11-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதி நாளான இன்று இலவசமாக பல்வேறு நாடுகளின் ராணுவத் தளவாடங்களைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை தினமான இன்று கண்காட்சியைப் பார்வையிட காலை முதலே மக்கள் குவிந்தனர்.  பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து அரங்குகள் வைத்துள்ளவர்கள் ராணுவத் தளவாடங்களின் இயக்கங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

தங்கள் குழந்தைகளுக்கு ராணுவத் தளவாடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பெற்றோர், அவர்களை நாட்டுக்காக ராணுவத்தில் சேர்க்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கண்காட்சி இருப்பதாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories