செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி*

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ்

IMG 20180417 WA0020 - 2026

தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை வரிசையாகக் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தன் புகார்கள் குறித்து ஊடகங்களின் கவனத்தைப் பெறும் வகையில், அண்மையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது நடிகர் சங்கத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், உண்மையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்றால், நடிகை ஸ்ரீரெட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும் என கருத்து கூறியிருந்தார். ஊடகங்களால் வெறும் செய்திகளைத்தான் வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது என அவர் பேசினார்.

இந்நிலையில், பவன் கல்யாணின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, பவன் கல்யாணை சகோதரராகக் கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

உடனே,  செய்தியாளர்கள் முன்னிலையில் தன் செருப்பை எடுத்து, தன்னைத்தானே அடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.