காங்கிரஸ் ஆட்சியில் ‘கார்டன் சிட்டி’ கார்பேஜ் சிட்டியாக மாறி விட்டது: மோடி

இந்தியா சற்றுமுன்

modi reuters 6 - 2026நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்கும் பெங்களூரு நகரத்தை, மிக மோசமான பாவ நரகமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றி விட்டார் என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்கட்சியான பாரதீய ஜனதாவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘சிலிகான் வேலி’ தற்போது சிலிகான் நரகமாகி விட்டது. ‘கார்டன் சிட்டி’ தற்போது கார்பேஜ் (குப்பை) சிட்டி ஆகி விட்டது கம்யூட்ட்ர் கேபிடல் கிரைம் கேபிடலாகி விட்டது. ஸ்டார்ட் ஹப் தற்போது ஓட்டை ஹப் ஆகி விட்டது. பெங்களூரு நகரத்தில் மிக மோசமான கலாச்சார சீரழிவு ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் ஆளும் காங்கிரஸூம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுமே காரணம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.