தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அதிமுக அரசுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கொளத்தூரில் வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதா இந்த முறையேனும் தேர்தலை முன்னிட்டு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



