கல்யாண மண்டபத்திலிருந்து நேராக வாக்குச் சாவடிக்கு… அசத்திய தம்பதி

Published:

karnataka election marriage couple - 2026

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்து காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காங்கிரஸ், பாஜக., ம.ஜ.த., என கட்சிகள் வாக்காளர்களைக் கவர பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, வாக்குச் சாவடிக்கு வரவழைத்துள்ளன. வயதானவர்கள் முதல் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கின்றனர்.

இவர்களில் இருவர் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். ஒரு தம்பதி, கல்யாணக் கோலத்துடன், மணமக்களுக்கான உடையுடன் வாக்குச் சாவடிக்கு மாலையும் கழுத்துமாக வந்து நின்றனர்.

தாலி கட்டி மஞ்சள் பொட்டு வெச்சி மங்கலகரமா வாழ்க்கையை துவக்கின கையோட கையில் விரலை கருப்பாக்கி மையை வைத்துக் கொள்ள வந்த அந்தத் தம்பதியைப் பார்த்து வாக்குச் சாவடியில் வரிசையில் நின்றிருந்த பலரும் அதிசயித்துப் பார்த்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img