முதல்வர் பதவிக்கு குறிவைத்துள்ள குமாரசாமிக்கு உறவினர்கள் கூறும் அறிவுரை என்ன தெரியுமா?

Published:

deve gowda kumarasamy - 2026

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா சட்டப் பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார். இந்நிலையில், மஜத., எம்.எல்.ஏ.,க்கள் பலரும் காங்கிரஸுடனான கூட்டணியை விரும்பவில்லை என்று தெரிகிறது. அதுபோல், குமாரசாமியின் உறவினர்களும் காங்கிரஸை நம்ப வேண்டாம் என்று குமாரசாமிக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

ஹைதராபாத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களில் சிலர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலின் லேண்ட்லைன் எண்ணில் இருந்து பாஜக.,வினரை தொடர்பு கொண்டதாக டிவி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

மேலும், குமாரசாமியின் நடவடிக்கை பிடிக்காமல், பின்னாளில் 3ல் 2 பங்கு எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று திரண்டு குமாரசாமியை வெளியேற்ற திட்டமிட்டு தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் பரவின.

இந்நிலையில், குமாரசாமியின் உறவினர்கள், அவரை பாஜக.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்து வருகின்றனர். மேலும், காங்கிரஸை நம்பாதே என்றும் அறிவுரை கூறி வருகின்றனராம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

கர்நாடகாவில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள பாஜக.,வின் எடியூரப்பாவுக்கு 104 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. ஆட்சியை தக்கவைக்க அவருக்கு இன்னும் 8 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு தேவைப் படுகிறது.


 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img