பிரதமர் மோடியை சந்தித்த குமாரசாமி! நான்காண்டு ஆட்சிக்கு பாராட்டு!

இந்தியா சற்றுமுன்

 

modi kumarasamy - 2026

கர்நாடகத்தில் தேர்தலுக்கு பிறகு அமைந்த காங்கிரஸ்- மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்து, முதல்வராக மஜத தலைவர் குமாரசாமி பதவியில் அமர்ந்துள்ளார். ஆயினும், அமைச்சரவை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, நான்காண்டு கால பாஜக ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், கர்நாடக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, கர்நாடக அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் நிலக்கரி கிடைக்க வகை செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தாராம். இந்த சந்திப்பு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

modi kumarasamy2 - 2026

முன்னதாக நான் காங்கிரஸ் கட்சிக்கே கடன்பட்டவன், கர்நாடக மக்களுக்கு அல்ல என்று முதல்வர் குமாரசாமி கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.