புதிய ரூ.100 நோட்டு மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஊதா (லாவண்டர்) நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நோட்டின் முன்புறத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படமும், பின்புறத்தில், குஜராத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான ராணி கி வாவ் குளத்தின் படமும் உள்ளன.
அதற்கு கீழ் “RANI KI VAV” என்ற வாசகம் உள்ளது. இந்த நோட்டு விரைவில் வெளியிடப்படும் எனக்கூறியுள்ள ரிசர்வ் வங்கி, தற்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் எனக்கூறியுள்ளது.