நாட்டிலேயே முதலாவதாக சென்னையில்! சாலையில் எரியும் உலகத் தர நவீன சிக்னல்கள்!

signal3 - 2026இந்தியாவில் முதன் முறையாக சென்னைக் காவல்துறையினரின் நுண்ணிய நல்முயற்சியாக, சென்னையில் சாலையில் ஒளிரும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப் பட்டு வருகின்றன.

போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாலையில் ஒவ்வொரு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அவற்றைக் கவனிக்க இயலாமல் போவதும், சில நேரங்களில் கவனித்தும் விதிமுறைகளை மீறிச் செல்வதும்  நடைபெறுகிறது.

இவற்றைத் தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை மதிக்கவும் சென்னைக் காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை  எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது புது முயற்சியாக சிக்னல் கம்பங்களின் கீழே நிறுத்தக் கோட்டை வாகன ஓட்டிகளின் கண்களுக்குத் தெரியுமாறு சாலையிலேயே சிவப்பு, வெள்ளை, நீல வண்ணங்கள் மாற்றி மாற்றி ஒளிருமாறு விளக்குகள் பொருத்தியுள்ளனர்.

signal1 - 2026சிக்னல் கம்பங்களைக் கவனிக்கத் தவறும் ஓட்டிகளின் கண்களில்கூட சாலையில் ஒளிரும் இந்த சிக்னல் விளக்குகள் படாமல் போகாது என்பதால் இத்தகைய விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இந்த அமைப்பு காரணமாக வாகன ஓட்டிகள் சாலையின் நடுவில் ஒளிரும் இந்த விளக்குகளைப் பார்த்து வாகனத்தை அதற்கேற்ப கட்டுப்படுத்தமுடியும்.

வெளிநாடுகளில் இதுபோன்ற போக்குவரத்து விளக்கு ஏற்பாடுகள் உள்ளன. அவை, இந்தியாவில் அதிலும் சென்னையில் செய்யப்பட்டுள்ளன.

தற்போது சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்கு, பல்வேறு இடங்களில் உள்ள சிக்னல்கள், யூ டர்ன் எனப்படும் வளைவு, ஸ்பீட் பிரேக்கர்கள் ஆகிய இடங்களிலும்  பொறுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories