கறுப்பு பணம் விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும், “சி.பி.ஐ., அமலாக்கதுறை உள்ளிட்ட அரசு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி., ஆனந்த்சர்மா மாநிலங்களவையில் பேசிய கூறினார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், சுவிஸ்சில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து மத்திய அரசு தவறான தகவலை தெரிவிப்பதோடு, இதனை மீட்க எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றார்.
மேலும், சி.பி.ஐ., அமலாக்கதுறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குகள் போடப்படுகிறது. என்றும் கூறினார்.
மேலும், சமீபத்தில் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரிக்க மறுப்பதேன் ? என்று கேள்வி எழுப்பிய அவர் லோக்பால், லோக்அயுக்தா கொண்டு வருவதாக அளித்த வாக்குறுதி என்னாச்சு ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.



