தகவல் அறியும் சட்டமான ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட அறிக்கையில், உண்மையை தெரிந்து கொள்ள அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உள்ளது என்றும், ஆனால், மக்களிடமிருந்து உண்மை மறைக்கப்பட வேண்டும் என அதிகாரத்தில் உள்ளவர்களை, மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என பாரதீய ஜனதா கட்சி நினைக்கிறது. இதனால் ஆர்டிஐ சட்டத்தில் செய்யப்படும் திருத்தம், அதனை பயனற்றதாக்கிவிடும் என்றதோடு, சட்டத்தை திருத்துவதற்கு அனைத்து இந்தியர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.



