December 6, 2025, 11:34 AM
26.8 C
Chennai

பிரிட்டன் மன்னராக மூன்றாம் மகுடம் சூடிய சார்லஸ் கடந்து வந்த பாதை..

986343 - 2025
#image_title

பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவரது மூத்த மகனான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்றார். அரசர் சட்டத்தையும் இங்கிலாந்து திருச்சபையையும் நிலை நிறுத்துவேன் என்று அவர் உறுதிமொழி ஏற்றார். இதனைத்தொடர்ந்து தங்க அங்கி அணிவித்து அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மகுடம் சூட்டப்பட்டது. கையில் செங்கோலும் அளிக்கப்பட்டது.

பிரிட்டனின் அரச அரியணையில் வயதான நிலையில் இருக்கும் ஒருவருக்கு மன்னர் மகுடம் சூட்டுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. நிகழ்வில் ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசி (வேல்ஸ்) கேட் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மன்னரின் இளைய மகன் ஹாரி கலந்துகொண்டார். ஆனால், அவரது மனைவி மெக்கல் மார்க்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

விழாவில் 10-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடப்பட்டன. அதில் முதன்முதலாக வேல்ஸ் மொழி பாடலும் பாடப்பட்டது. இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து 2,000-க்கும் அதிகமான பிரபலங்களும், விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பின், அரியணை ஏறும் நபராகவும், காமன்வெல்த் தலைவராகவும் இளவரசர் சார்லஸ் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். ராணி 2-ம் எலிசபெத் மறைவால், சம்பிரதாயப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசர் சார்லஸை, மன்னர் 3-ம் சார்லஸாக லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் அசெஷன் கவுன்சில் அறிவித்தது. இந்தநிலையில், தற்போது அவர் அதிகாரப்பூர்வமாக பிரிட்டனின் மன்னராகியுள்ளார்.

சார்லஸ் குழந்தைப் பருவத்தில் இருந்து அரண்மனையில் வளர்ந்தாலும், பாரம்பரிய முறைப்படி இவர் தனது கல்வியை அரண்மனையில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று பயின்றார். கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரிக்கு சென்று வரலாற்று பாடத்தில் கடந்த 1970-ம் ஆண்டில் பட்டம் பெற்றார். பல்கலைக்குச் சென்று பட்டம் பெற்ற அரச குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையில் சேர்ந்து பைலட்டாக 7 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார். இங்கிலாந்து கடற்படையின் எச்எம்எஸ் பிரானிங்டன் என்ற கண்ணிவெடி அகற்றும் கப்பலின் கமாண்டராக பணியாற்றி 1976-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

கடந்த 1981-ம் ஆண்டு டயானாவை சந்தித்து சார்லஸ் தனது காதலை வெளிப்படுத்தினார். இதை டயானா ஏற்றுக் கொண்டதால், இவர்களது திருமணம் 1981-ல் நடந்தது. முதல் குழந்தை இளவரசர் வில்லியம் 1982-ல் பிறந்தார். இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி 1984-ல் பிறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் சார்லஸ் – டயானா உறவில் விரிசல் ஏற்பட்டது. சார்லஸின் முன்னாள் காதலி கமீலாதான் இந்தப் பிரிவுக்கு காரணம் எனக் கூறப்பட்டது.

கடந்த 1992-ம் ஆண்டு இருவரும் பிரிந்து 1996-ல் விவாகரத்து பெற்றனர். அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். கடந்த 2005-ம் ஆண்டு முன்னாள் காதலி கமீலாவை, இளவரசர் சார்லஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories