இன்று சட்டபிரிவு 35-ஏ எதிரான வழக்கு விசாரணை – அமர்நாத் யாத்திரை ரத்து

இந்தியா சற்றுமுன்

19 Aug 05 amarnath yatra - 2026சட்டபிரிவு 35ஏ-க்கு எதிரான வழக்கு நாளை ஜம்முவில் விசாரணைக்கு வரவிருப்பதால் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 35-ஏ ஆனது காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதோடு, காஷ்மீர் மாநில மக்களுக்கு நிரந்தர குடிமக்கள் எந்த அந்தஸ்தையும் வழங்குகிறது. மேலும் இப்பிரிவின் கீழ் வெளிமாநிலத்தவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் எந்தவித அசையா சொத்தையும் வாங்க முடியாது.

இந்நிலையில் 35-ஏ சட்டபிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையானது இன்று நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் 35-ஏ சட்டபிரிவுக்கு ஆதரவாக அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஷ்மீர் முழுவதும் பதற்றம் நிலவுவதால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் வலுபடுத்தப்படுள்ளது.

இதை தொடர்ந்து மக்களின் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு முகாம்களில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் முகாம்களிலிருந்து வெளியேற தடை விதித்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் பஞ்சாயத்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், இவ்வழக்கின் காரணமாக சட்ட-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இதனால் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை காஷ்மீர் மாநில அரசு உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.