திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளது – செயல் அலுவலர் அனில் சிங்வால்

இந்தியா சற்றுமுன்

11 Sep12 Thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கவுள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை இன்று சமர்ப்பிக்க உள்ளதாகவும், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்துள்ளார்.

பிரம்மோற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அனைத்து சேவைகள், முன்னுரிமை தரிசனங்கள், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவம், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், சர்வ தரிசன டிக்கெட் பக்தர்கள் வருகைக்கேற்ப குறைந்த அளவில் வழங்கப்படும் எனவும் திருமலைக்கு வருவதற்கான இரண்டு மலைப்பாதைகளும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் அனில் சிங்வால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.