சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க… தில்லி மெட்ரோ ரயிலில் மோடி பயணம்!

Published:

modi in metro - 2026

புது தில்லி : தில்லியில் நடைபெற்ற இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மைய திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் பகுதியில் இருந்து துவாரகாவிற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.

மொத்தம் 14 நிமிடங்கள் தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மோடி, ரயிலில் பயணித்த சக பயணிகளுடன் கலந்துரையாடினார்.

முதலில் பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணிக்க வந்ததைக் கண்டு ஆச்சரியப் பட்ட பயணிகள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சக பயணிகளுடன் பிரதமர் மோடியும் சிரித்து பேசியபடி பயணித்தார்.

தில்லியில் விவிஐபி.,க்கள் பயணிக்கும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள பகல் 3.13 முதல் 3.27 வரை மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார். பின்னர் விழா முடிந்து திரும்பும் போதும் துவாரகாவில் இருந்து தவுலா கவுன் மெட்ரோ நிலையத்திற்கு 4.39 மணி முதல் 4.54 மணி வரை மோடி பயணம் செய்தார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இதனைத் தன் டிவிட்டர் பக்கத்திலும் மோடி பகிர்ந்தார். அந்தப் பதிவு:

அதுபோல், போக்குவரத்து விதிகளை மதித்து கடைப்பிடிப்பதில் மோடி முன்னுதாரணத்துடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு உலாவருகிறது. ராகுல், ஸ்டாலின் உள்ளிட்டோர் காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணியாமல் செல்லும் படங்களும், மோடி சீட் பெல்ட் அணிந்து முன்னுதாரணத்துடன் செல்லும் படங்களும் இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

Seat belt in car - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img