IMG 20181212 WA0016 - 2026

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின இதில் பாஜக ஆட்சி செய்த மூன்று மாநிலங்களையும் காங்கிரஸிடம் பறிகொடுத்தது முன்னதாக இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன மேலும் இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழக்கும் என்று கடந்த ஓராண்டாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன இந்த நிலையில் ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவினர் கடுமையாக போராடினர்

இந்த நிலையில் மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியையே பரிசாக பெற்றது. பாஜக மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் மாநிலத்திற்கு செய்யப்பட்ட முன்னேற்றங்கள் என பலவித பிரசாரங்களையும் மீறி காங்கிரஸ் முன்வைத்த ஜாதி அரசியலும் பொய்யான வாக்குறுதிகளும் மக்களிடம் எடுபட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர் மேலும் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் போன்றவர்கள் இஸ்லாமியர்களிடம் மேற்கொண்ட மதரீதியான பிரசாரங்களும் கிறிஸ்துவ மிஷனரிகளின் வலுவான பாஜக எதிர்ப்பு பிரச்சாரங்களும் இந்த தேர்தலில் பெரும் பங்காற்றி இருப்பதை பாஜகவினர் உணர்ந்துள்ளனர்

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

இந்த நிலையில் பாஜகவினரின் கடுமையான உழைப்புக்கு பிரதமர் மோடி தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவரது ட்விட்டர் பதிவில்….

பாரதிய ஜனதா காரியகர்த்தர்கள் இரவு பகலாக மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக உழைத்தார்கள். அவர்களது கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். தேர்தலில் வெற்றி அல்லது தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். இன்றைய தேர்தல் முடிவு நமக்கு இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் மேலும் அதிகம் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அளிக்கிறது … என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending