ஜிஎஸ்டி., வசூல் எவ்வளவு? தமிழகத்துக்கு திருப்பி அளித்த தொகை எவ்வளவு?: மைத்ரேயன் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்!

Published:

Maitreyan MP - 2026

மாநில வாரியாக ஜிஎஸ்டி., வசூல் எவ்வளவு என்றும், தமிழகத்துக்கு மத்திய அரசு திருப்பி அளித்த தொகை எவ்வளவு என்றும் மாநிலங்களவை அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் வா. மைத்ரேயன் எம்.பி. டிச.18ம் தேதி எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில் தமிழகத்துக்கு ரூ.20,536 கோடி அளிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கேள்வி: சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு எதிர்பார்த்தபடி அரசுக்கு தொகை கிடைத்துள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்கள். கடந்த ஓராண்டில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை மாநில வாரியாக. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வாறான ஜி எஸ் டி வசூலில் இருந்து மத்திய அரசு திரும்பி அளித்துள்ளதா? அவ்வாறெனில் அது பற்றிய விவரங்கள். தமிழ்நாட்டுக்கு திரும்பி அளித்துள்ள தொகை .

பதில்: மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ்பிரதாப் சுக்லா

2017-18 மற்றும் 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜி எஸ்டி,, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி குறித்த விவரங்கள் மாத வாரியாக வழங்கப்பட்டுள்ளது.

2017 -18 ஆம் ஆண்டில்…
ஆகஸ்டு மாதம் 95633 கோடி ரூபாய்
செப்டம்பர் மாதம் 94064 கோடி ரூபாய்
அக்டோபர் 93333 கோடி ரூபாய்
நவம்பர் 83780 கோடி ரூபாய்
டிசம்பர் மாதம் 84314 கோடி ரூபாய்
ஜனவரி மாதம் 89825 கோடி ரூபாய்
பிப்ரவரி மாதம் 85962 கோடி ரூபாய்
மார்ச் மாதம் 92167 கோடி ரூபாய்
ஆக மொத்தம் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 89,885 கோடி ரூபாய்

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

2018-19 ஆம் ஆண்டில்
ஏப்ரல் மாதம் 1,03,459 கோடி ரூபாய்…
மே மாதம் 94,016 கோடி ரூபாய்
ஜூன் மாதம் 95610 கோடி ரூபாய்
ஜூலை மாதம் 96483 கோடி ரூபாய்
ஆகஸ்டு மாதம் 93960 கோடி ரூபாய்
செப்டம்பர் மாதம் 94442 கோடி ரூபாய்
அக்டோபர் மாதம் 100710 கோடி ரூபாய்
நவம்பர் மாதம் 97637 கோடி ரூபாய்

2017-18 ஆம் ஆண்டு ஆகஸ்டு 2017 முதல் மார்ச் 2018 ஆம் ஆண்டு வரையில் மாநில வாரியாக மாநில ஜிஎஸ்டியாக வசூலாகிய தொகை:
ஜம்மு காஷ்மீர் 2611 கோடி ரூபாய்
ஹிமாச்சல் பிரதேஷ் 1833 கோடி ரூபாய்
பஞ்சாப் 7901 கோடி ரூபாய்
சத்தீஸ்கர் 800 கோடி ரூபாய்
உத்தராகண்ட் 2611 கோடி ரூபாய்
ஹரியானா 10345 கோடி ரூபாய்
தில்லி 13625 கோடி ரூபாய்
ராஜஸ்தான் 12190 கோடி ரூபாய்
உத்தர்பிரதேஷ் 25455 கோடி ரூபாய்
பிஹார் 6746 கோடி ரூபாய்
சிக்கிம் 193 கோடி ரூபாய்
அருணாச்சல் பிரதேஷ் 224 கோடி ரூபாய்
நாகாலாந்து 188 கோடி
மணிப்பூர் 302 கோடி
மிசோரம் 170
திரிபுரா 480 கோடி
மேகாலயா 376 கோடி
அசாம் 4077 கோடி
மேற்குவங்கம் 15174 கோடி
ஜார்கண்ட் 4124 கோடி
ஒடிஷா 6628 கோடி
சத்தீஸர் 4386 கோடி
மத்திய பிரதேஷ் 9818 கோடி
குஜராத் 21578 கோடி
டாமன் மற்றும் டையூ 11600 கோடி
தாத்ரா நகர் ஹவேலி 235 கோடி
மஹாராஷ்டிரா 50876 கோடி
கர்நாடகா 24305 கோடி
கோவா 1464 கோடி
லட்சத்தீவு 7 கோடி
கேரளா 12292 கோடி
தமிழ்நாடு 24907 கோடி
புதுச்சேரி 519 கோடி
அந்தமான் நிக்கோபார் 157 கோடி
தெலங்கானா 13073 கோடி
ஆந்திரப்பிரதேசம் 10826 கோடி

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

மத்திய அரசு வசூலிக்கும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 2017 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 17 மற்றும் 18 இன் கீழ் முறையே மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான இறுதிப்பயன்பாட்டுக்கு அல்லது மாற்றுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு அவ்வப்போது தற்காலிக அடிப்படையில் மத்திய அரசிடம் எஞ்சிய ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகை க்கு தீர்வு காணப்படும்.

2017 ஜூலை மற்றும் 2018 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான தொகை 8706 கோடி ரூபாய் ஏப்ரல் 2018 மற்றும் 2018 நவம்பர் வரையிலான தொகை 11830 கோடி ரூபாய் ஆகியன தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள தொகையாகும். இந்த ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையில் தற்காலிக ஒதுக்கீடும் அடங்கும்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img