மூன்றாவது டெஸ்ட் – 137 ரன்னில் இந்தியா வெற்றி: தொடரில் முன்னிலை!

Published:

australia ind test - 2026

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

போட்டியின் கடைசி நாளான இன்று காலை முதலே மழை பெய்து வந்தது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்ற பின்னர் இன்றைய நாள் ஆட்டம் தொடங்கியது. 9வது விக்கெட்டுக்கு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கும்மின்ஸ் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் 63 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அணியின் ரன் 261 ஆக இருந்த போது 9 விக்கெட்டை இழந்தது ஆஸி., அணி.

தொடர்ந்து நாதன் லையொன் 7 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆஸி., அணி 261 ரன் மட்டுமே எடுத்தது. இன்று போட்டி தொடங்கி ஆஸி., அணி 3 ரன் மட்டுமே எடுத்து, 2 விக்கெட்களையும் இழந்தது. இதனால் 137 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

இந்திய தரப்பில் பும்ரா, ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா, ஷமி இருவரும் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

முழுமையான ஸ்கோர் விவரங்களை அறிய…

Related articles

Recent articles

spot_img