பிரபல ஆன்மிக சுற்றுலாத்தலமான கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலையை (நவ.,05) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல ஆன்மிக சுற்றுலா தலமான கேதார்நாத் பகுதியில் ஆதிசங்கரருக்கு 12 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது.
35 டன் எடை கொண்ட இந்த சிலை தற்போது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் காமி ஆதிசங்கரரின் இந்த அமர்ந்த கோலத்தில் உள்ள சிலையை காண வந்தார்.
மைசூரைச் சேர்ந்த அனுபவமிக்க சிற்பிகளால் செதுக்கப்பட்ட கோலரைட் ஸ்கிட் கல்லால் உருவான இந்த சிலை, அதீத பருவநிலை மாற்றத்தையும், வெயிலையும், மழையையும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது.
பிரதமர் மோடி வரும் நவம்பர் 5ம் தேதி ஆதிசங்கரர் சிலையை திறந்து வைக்க உள்ளார். தற்போது தேங்காய் நீர் ஊற்றி இந்த சிலை சுத்தம் செய்யப்படுகிறது.
இதனால் நாளை சிலை பளபளப்புடன் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரபல சிவன் கோவில்களில் இந்த சிலையின் திறப்பு விழா நேரலையில் திரையிடப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் சாமி தெரிவித்துள்ளார்.