சபரிமலை பாரம்பரியம் தகர்ப்பு! கேரள போலீஸார் உதவியுடன் சபரிமலையில் நுழைந்த இரு பெண்கள்!

Published:

sabarimala women entered - 2026

கேரள போலீசாரின் உதவியுடன் இன்று காலை சபரிமலை ஆலயத்தில் இரண்டு மாவோயிஸ்டு பெண்கள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகின. உலகத்தின் கவனத்தை திசைதிருப்ப பெண்கள் சுவர் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபரிமலை மரபுகளை உடைக்க அரசு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப் படுகிறது.

இன்று காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில் இந்து மத அமைப்புகள் மற்றும் பாஜக., ஆகியவற்றின் எதிர்ப்புக்கு இடையில், மார்க்சிஸ்ட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதாக செய்திகள் வெளியாகின.

சபரிமலைக்கு இன்று அதிகாலை 3.45 மணி அளவில் சபரிமலைக்கு வந்தனர். சபரிமலை பாதுகாப்பு கம்யூனிஸ்ட் மாஃபியாக்கள் மற்றும் போலீஸாரின் பாதுகாப்பின் கீழ் இருந்தது. அவர்கள் பதினெட்டாம் படிகளில் ஏறாமல் அதனைத் தவிர்த்து, பக்கவாட்டு வழியில் சன்னிதானத்துக்கு வந்ததாகக் கூறப் படுகிறது. அவர்கள் இருவரும் தங்கள் முகங்களை மூடிக்கொண்டு வந்தனர் என்றும், சபரிமலையில், காலை சுமார் மூன்று மணிக்கெல்லாம் அவர்கள் வந்தார்கள் என்றும் கூறப் படுகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

அவர்கள் தரிசனத்துக்காக போலீஸார் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்! இந்தச் சம்பவத்தை போலீஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்தச் செய்தியை ஊடகங்கள் முதலில் வெளியிட்டன.

சபரிமலை பாதுகாபில் உள்ள கேரள போலீஸார் முன்னதாக, தங்களால் சபரிமலைக்கு இனி பெண்கள் வந்தால் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி, விவகாரத்தை திசைதிருப்பியிருந்தனர். மேலும், சபரிமலை விவகாரத்தையும் மகளிர் சுவர் விவகாரத்தில் கவனம் வைக்க வைத்து, திசை திருப்பியிருந்தனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், மலப்புரத்தில் வசித்து வரும் பிந்து மற்றும் கனகதுர்கா இருவரும் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சபரிமலை சந்நிதிதானத்தில் புகுவதற்காக அரசால் வரவழைக்கப்பட்டனர். ஆனால் ஐயப்ப பக்தர்களின் எதிர்ப்புக்கு இடையில் சந்நிதானத்துக்கு வர இயலவில்லை. இந்த நிலையில் பெண்கள் இருவரும் இன்று சபரிமலைக்கு அழைத்துவரப் பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனால், சபரிமலை தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெறும் என்றும், தந்திரி, பந்தளம் மன்னர் குடும்பம் ஆகியவை இனி சபரிமலை விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கக் கூடும் என்றும் கூறப் படுகிறது.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img