
பாரம்பரியமிக்க சபரிமலையில் இன்று காலை இரு பெண்கள் போலீசார் உதவியுடன் நுழைந்தனர். அவர்கள் பதினெட்டுப் படிகளில் ஏற வில்லை என்று அவர்கள் கூறினர். விஐபிக்கள் செல்லும் பக்கவாட்டு படிகளில் ஏறி சபரிமலை சன்னதி முன் தரிசனத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சபரிமலை பாரம்பரியம் தகர்க்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர் ஏற்கெனவே சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் தாங்கள் நடையை அடைத்து சுத்தி பூஜை செய்வோம் என்றும் சபரிமலை சந்நிதியே முழுதும் அடைக்கப்படும் என்றும் தந்திரிகளும் பந்தள ராஜ குடும்பமும் தெரிவித்திருந்தது
அதன்படி இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை காண வரிசையில் நின்று வந்து கொண்டிருந்த நிலையில் இரு பெண்கள் நுழைந்ததால் சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் முன்னதாகவே பதிவு செய்து, ஏற்பாடுகளைச் செய்து வந்த பக்தர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.




கேரளாவில௠ஆடà¯à®šà®¿ செயà¯à®¯à¯à®®à¯ கமà¯à®¯à¯‚னிஸà¯à®Ÿà®¿à®©à¯ சிதà¯à®¤à¯ விளையாடà¯à®Ÿà®¾à®²à¯ அவஸà¯à®¤à¯ˆà®¯à®¿à®²à¯ à®à®¯à®ªà¯à®ª பகà¯à®¤à®°à¯à®•ளà¯, இவரà¯à®•ளின௠சிரமதà¯à®¤à®¾à®²à¯, அயà¯à®¯à®ªà¯à®ªà®©à¯ தணà¯à®Ÿà®©à¯ˆ கொடà¯à®ªà¯à®ªà®¾à®°à¯.