கேரளத்தில் சர்ச்க்கு உரிமை கொண்டாடி… மோதல்! பிஷப் படுகாயம்! போலீஸார் குவிப்பு!

Published:

mannuthichurch - 2026

மன்னமங்கலம் செண்ட் மேரீஸ் சர்ச், மலங்காரா சர்ச் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. ஆர்தோடாக்ஸ், மற்றும் ஜாகோபைட் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வலுத்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக வெளிப்படையாக சண்டையிட்டு வரும் இரு தரப்பும் நேற்று மேலும் மோதிக்கொண்டது.

திரிசூர் பிஷப் யுஹானோன் மார் மெலிடோஸ் தலைமையிலான, ஆர்தோடாக்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள், சர்ச்சின் கேட் வாசலில் முன்னர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரம் ஜகோபைட் பிரிவைச் சேர்ந்தவர்கள், சர்ச்சுக்குள் அமர்ந்து பிரார்த்தனைகளைப் பாடிக் கொண்டிருந்தனர். புதன் கிழமை காலை முதல் இந்தப் போக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில் திருச்சூர் செயிண்ட் மேரீஸ் சர்ச்சை நிர்வகிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் ஆர்த்தோடோக்ஸ் சபை திருச்சூர் பிஷப் காயம் அடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாக்கோபு சபையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சர்ச்சுக்குள் ஆர்தோடாக்ஸ் சபையினர் நுழைய முயன்றபோது கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை மேலும் தீவிரமாக கண்காணிப்பதாக மாவட்ட ஆட்சியர் டி.வி.அனுபமா தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

Related articles

Recent articles

spot_img