மூன்று முக்கியப் பிரிவினரை குஷிப் படுத்திய பாஜக.,!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
modi kerala1 - 2026

முக்கியமான மூன்று தரப்பை மகிழ்ச்சி படுத்தியுள்ளது தற்போதைய பாஜக., அரசு.

இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் முதல் தரப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார்

அடுத்து மத்தியதர வர்க்கத்திற்கு மிகப்பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமையக் கூடிய வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சம் என்ற அளவில் அறிவித்திருக்கிறார்

இவற்றுக்கு மேலாக மத்திய அரசு அண்மையில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. அதில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பொதுப்பிரிவினருக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது

இதன்மூலம் மூன்று முக்கிய தரப்பை மத்திய அரசு மகிழ்ச்சிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.