h.raja 1 - 2026

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பொய்வழக்கில் கைது செய்தது ஐ.மு.கூ அரசு! இவற்றை மறந்துவிட்டு இன்று எதிர்க்கட்சிகள் பேசுவது வெட்கம் கெட்ட செயல் என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இது குறித்து அவர் பதிவு செய்த டிவிட்டர் பதிவுகளில்…

மோடிஜி முதல்வராக இருந்த போது சிபிஐ அவரை 9 மணி நேரம் விசாரித்தது அவர் முழு ஒத்துழைப்பு தந்தார். அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாஜியை பொய் வழக்கில் கைது செய்தது திமுக, காங்கிரஸ் ஐமுகூ அரசு. அன்று இவை அனைத்தையும் செய்த திமுக இன்று கூக்குரலிடுகிறது. வெட்கம் கெட்ட திமுக.

சாரதா சிட்பண்ட் வழக்கு 2014 மே 9 ம் தேதி உச்சநீதிமன்றத்தால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது காங்கிரஸ், திமுக வின் ஐமுகூ ஆட்சியில். இது தெரியாத முட்டாள்கள் மோடிஜி அரசை குறை கூறுவது விந்தையிலும் விந்தை. .. என்று கூறியுள்ளார் ஹெச்.ராஜா.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending