kolkatta police1 - 2026

மேற்கு வங்க நிகழ்வுகள் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாடி அறிக்கை அளித்துள்ளார்.

சாரதா சீட்டு மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா காவல் ஆணையர் சான்றுகளை அழிக்க முற்படுவதாகக் கூறினால் அது பற்றிய சான்றுகளைக் கொண்டுவந்தால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.

இதனிடையே மேற்குவங்கத்தில் சிபிஐ அதிகாரிகளைக் காவல் துறையினர் காவல் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது குறித்து மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் கேட்டுள்ளார்.

அவரது விளக்கக் கேட்பை அடுத்து, ஆளுநரும் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து இன்று தனது அறிக்கையை அனுப்பியுள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending