பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப் படைக்கு பாராட்டுகள்: ராம.கோபாலன்!

Published:

ramagopalan2 - 2026

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்துள்ள இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

பத்து நாட்கள் முன்பு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்தவுடனேயே இஸ்லாமி பயங்கரவாத அமைப்பு, இதனை தாங்கள் தான் நடத்தியது என மார்தட்டி அறிவித்தது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் பாகிஸ்தானில் தான் இருப்பதும், அந்த அமைப்பின் பயிற்சி முகாம்கள் இந்திய எல்லையை ஓட்டி பாகிஸ்தானில் இருப்பதும் உலகறிந்த உண்மை.

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கருத்து கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்துள்ளது இந்திய விமானப் படை. இதனை அனைவரும் வரவேற்பார்கள். பயங்கரவாதம் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை, அதனை தான் இந்திய இராணுவமும் செய்துள்ளது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு விஷயங்களில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

இந்நேரத்தில் பாரத அரசிற்கும், இராணுவத்திற்கும் ஒவ்வொரு தேசபக்தனும் உறுதுணையாக இருந்து, தேச நலனுக்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போம். இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இந்து முன்னணி பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.. என்று கூறியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img