10 சத இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு! தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Published:

supreme court of india - 2026

அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப் பட்டு, கடந்த மாதம் முதல் உடனடியாக அமல்படுத்தப் பட்ட 10 சத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்த, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும், இந்த வழக்கு மற்றொரு அமர்வுக்கு மாற்றப் படலாமா வேண்டாமா என்பது குறித்து மார்ச் 28 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்து, வழக்கை தள்ளி வைத்தது.

Related articles

Recent articles

spot_img