ஜம்மு காஷ்மீரில் பூத்துக் குலுங்கும் துலீப் மலர்கள்!

Published:

tulip flowers - 2026

ஜம்மு-காஷ்மீரில் பூத்துக் குலுங்கும் துலீப் மலர்கள் தோட்டங்களால், தங்கள் மனதை பறிகொடுத்து அனுபவித்து வருகின்றனர் சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியையும் அழகையும் குலைப்பதற்காகவே பாகிஸ்தானில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் தங்கள் துப்பாக்கி குண்டுகளின் சத்தத்தால் மக்களை கதி கலக்கி வருகின்றனர். அவர்களிடம் இருந்து அப்பாவி பொதுமக்களைக் காக்க, மறு புறம் ராணுவம் துப்பாக்கி ஏந்தி பதிலடி கொடுத்து வருகிறது.

ஆனால் அழகிய இமயத்தின் பள்ளத்தாக்கில் அழகுக்கு அழகு சேர்க்க இயற்கை எழில் கொஞ்சும் துலீப் மலர்கள் தோட்டம் உள்ளூர் வாசிகளையும் சுற்றுலா வரும் பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அமைந்துள்ள இந்திரா காந்தி நினைவு துலீப் மலர்கள் தோட்டம், ஆசியாவிலேயே மிகப்பெரியது என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஊதா, மஞ்சள் என பல்வேறு நிறங்களில் பூத்துக் குலுங்கும் பூக்களால் நிரம்பி வழியும் இத்தோட்டத்தை காண வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் மனதை பறிகொடுத்து வருகின்றனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img