ராக்கெட் ஏவுறத நேர்ல பாக்கணுமா?! ஆன்லைன்ல முன்பதிவு செய்யுங்க…!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

isro gslv gsat 6a - 2026

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 22ம் தேதி ஏவப்பட இருக்கும் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்களும் நேரில் காண, முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது.

ரிசாட் 2-பி செயற்கைக்கோளைத் தாங்கி பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வரும் மே 22ஆம் தேதி காலை 5.27க்கு இந்த ராக்கெட் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கவுட்ன் டவுன் வரும் மே 21ஆம் தேதியன்று தொடங்கும்.

விண்வெளிக்கு ராக்கெட் ஏவப் படுவதை ஊடகத்தினர், முக்கியப் பிரமுகர்கள், விஞ்ஞானிகள் என குறிப்பிட்ட சிலரே நேரில் பார்க்க அனுமதிக்கப் பட்டு வந்தனர். இந்நிலையில், பொதுமக்களும் இவற்றை நேரடியாகக் காணும் வகையில் அண்மையில் திறந்தவெளி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு அனுமதி வழங்கப் பட்டு வருகிறது.

சுமார் ஐந்தாயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அந்த அரங்கில் இருந்து ரிசாட்-2பி செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதற்கு www.shar.gov.in இணையதளத்தில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.