6800 முதலீட்டாளர்களுக்கு யுஏஇ குடியுரிமை: ஷேக் மொகம்மத் திட்டம்!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Shaikh Mohammad Bin Rashid Al Maktoum - 2026

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி நிமித்தம் காரணமாக தற்காலிகமாக தங்கியுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் மொஹம்மது பின் ரஷீத் அல் மக்தும் செவ்வாய்க்கிழமை நேற்று அறிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் முதலீடு செய்தவர்கள், மருத்துவம், பொறியியல், அறிவியல், கலைகள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு ‘கோல்டு கார்டு’ வழங்கப்படும்.
இந்தக் கார்டு வைத்துள்ளவர்கள் அமீரகத்தில் நிரந்தர குடியுரிமை பெற தகுதி உடையவர்கள்.

முதல் கட்டமாக 6,800 முதலீட்டாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மொத்தம் 100 பில்லியன் திராம் (ரூ.1.90 லட்சம் கோடி) முதலீடு செய்துள்ளார்கள்” என்று ஷேக் மொஹம்மது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிறப்பு வாய்ந்த நிபுணர்கள், திறமை வாய்ந்தவர்கள், அமீரகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு உதவியவர்கள் ஆகியோரின் சேவையை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கோல்டு கார்டு அளிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.