ராகுலுக்கு என்ன ஆச்சு?! நடையே சரியில்லையே…!

Published:

rahul gandhi delhi - 2026

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு என்ன ஆயிற்று? அவரது நடையே சரியில்லையே! ஏன் அவர் இடது புற காலை தேய்த்து தேய்த்து நடக்கிறார்? ஏதாவது உடல் நலக் கோளாறால் சிரமப் படுகிறாரா என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

நேற்று பிரதமர் மோதியின் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அப்போது அவர் நடந்து வந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. அதில் அவர் காலை தேய்த்து தேய்த்து நடந்து வருகிறார்.

ராகுலின் முகம் கடுகடு வென்று கோபத்தில் சிவந்திருந்தது. அரைகுறை நரைத்த தாடியுடன் அவர் நடந்து வந்தார். இது குறித்து சிலர் வருத்தமும் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

அதே நேரம், ராகுலின் உடல் மொழி சரியில்லை என்றும், மோசமான அகம்பாவத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அருகே அமர்ந்திருந்தும் கூட அவரை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், அவருக்கு வணக்கம் எதுவும் செலுத்தாமல் அப்படியே சென்று அமர்ந்துவிட்டார் என்றும், பரம்பரை அரசியல்வாதி இப்படித்தான் இருப்பார் என்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

rahul manmohan - 2026

இருப்பினும், தேர்தலுக்கு முன்னர் அண்மையில் திருப்பதிக்கு வந்திருந்த ராகுல் இதே போன்றுதான் இடது காலை சாய்த்து நடந்து வந்தார். அது அப்போது கேலி செய்யப் பட்டது. ஆனால், ராகுல் ஏதோ உடல் நல பிரச்னையில் இருக்கிறார் என்று அவருக்காக பரிதாபத்துடன் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img