
காதல் திருமணம் செய்த நடன கலைஞர் மனைவியுடன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் அஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). நடன கலைஞர்.
இவர் அதே பகுதியில் வசித்துவரும் ஆர்யா (21) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார் ஆர்யாவும் விஷ்ணுவை காதலித்துள்ளார். . இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு ஆர்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்பையும் மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு விஷ்ணுவின் பெற்றோர் வீட்டில் காதல் தம்பதி வசித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆர்யா கர்ப்பிணியானார். இந்த தகவல் அறிந்து நேற்று மாலை ஆர்யாவின் பெற்றோர் மகளை பார்ப்பதற்காக வந்தள்ளனா்.
அப்போது வீட்டில் விஷ்ணுவின் தாய் மட்டுமே இருந்துள்ளார்.
அவர்களது படுக்கை அறை பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த ஆர்யாவின் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது விஷ்ணுவும், ஆர்யாவும் ஒரே துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இருவரும் இறந்துவிட்டனர் என்று கூறினார். இது குறித்து அஞ்சாலுமூடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தம்பதியான விஷ்ணு – ஆர்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


