வாக்கு வங்கி அரசியலில் மம்தா! கவனிப்பாரற்ற மேற்கு வங்க நோயாளிகள்!

இந்தியா உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

west bengal doctors - 2026

மேற்கு வங்காளத்தில் இளநிலை மருத்துவர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடு படும் அபாயத்தை நோக்கி இவ்விவகாரம் நகர்கிறது.

சிகிச்சைக்கு வந்த 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து போக..அவருடைய உறவினர்கள் கும்பல் பெரும்திரளாக வந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு மருத்துவர்கள் படுகாயம் அடைந்தனர். ஒருவருக்கு கண்பார்வை பாதிக்கப் பட்டுவிட்டது. இன்னொருவர் கோமா நிலைக்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

இதனால்.. இளநிலை மருத்துவர்கள் அனைவரும் பாதுகாப்பு கேட்டு போராட்டத்தில் இறங்கினர்.

மம்தாவோ … மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்கள் என்பதால் … போராட்டத்தின் உண்மையை உணர்ந்து கொள்ளாமல்..வழக்கம் போல முஸ்லீம் நோயாளிகளுக்கு ஹிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று பிஜேபியும், மார்க்சிஸ்டுகளும் சதி செய்து தூண்டி விடுகிறார்கள் என்று பேசியது … மருத்துவர்களை மேலும் கோபமடைய செய்திருக்கிறது.

போராட்டத்தை நிறுத்த இயலவில்லை என்று இரண்டு அரசு மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு.. அகில இந்திய மருத்துவர்கள் அமைப்பு ஆதரவை தெரிவித்துள்ளது. டெல்லியில், மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்க தயாராகிறார்கள். 3 நாட்களாக மேற்கு வங்காள மாநிலம்.. முழுமையான மருத்துவ சிகிச்சையின்றி தவிக்கிறது.

மம்தாவோ.. தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைத்துக் கொள்கிற அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.

  • கருத்து: பானு கோம்ஸ் (அரசியல் விமர்சகர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.