பள்ளி மாணவரின் அம்மா கணக்கில் ரூ.15 ஆயிரம் பணம் போடும் ‘அம்மா மடி’ திட்டம்! கையெழுத்திட்ட ஜெகன்!

Published:

jagan writer - 2026

“அம்ம ஒடி” (அம்மா மடி) பற்றி ஜெகனின் ஆந்திர அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. “அம்ம ஒடி” என்ற திட்டம் இனி இன்ட்டர் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்பதுதான் அந்த திட்டத்தின் சிறப்பு.

“அம்ம ஒடி” திட்டத்தின் கீழ் ஜெகன் மோகன் அரசு மீண்டும் ஒரு பரபரப்பு தீர்மானத்தை எடுத்துள்ளது.  இன்டர் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் கூட இந்த திட்டம் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான ஆணையை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கல்வித்துறை அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார்.

நவ ரத்தினங்கள் எனப்படும் ஒன்பது திட்டங்களின் ஒரு பகுதியான ‘அம்மா ஒடி’ திட்டம் இன்டர்மீடியட் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்று முதல்வர் ஜெகன் தெளிவுபடுத்தியுள்ளார். கல்வித் துறை அதிகாரிகளுடன் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், வெள்ளை நிற ரேஷன் கார்டு உள்ள, ரெசிடென்ஷியல் முறையில் பள்ளியில் தங்கிப் படிக்கும் பிள்ளைகள் உள்ள ஒவ்வொரு தாயின் வங்கிக் கணக்கிலும் ரூ 15,000 செலுத்த வேண்டும் என்று ஜெகன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

அரசின் இளநிலைக் கல்லூரிகளுடன் சேர்ந்து ரெசிடென்ஷியல் கல்லூரி (தங்கிப் பயிலும் கல்லூரி மற்றும் ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்) அனைவருக்கும் கூட அம்ம ஒடி திட்டம் சென்று சேர்கிறது.

ஜெகனின் நவரத்தினங்களில் ஒன்றான அம்ம ஒடி (அம்மா மடி) திட்டத்தின்படி தாம் அதிகாரத்திற்கு வந்தால் பள்ளியில் படிக்கும் இதிலுள்ள ஒவ்வொரு தாய்க்கும் ரூ.15.000 அளிப்பேன் என்று தேர்தலில் பிரசாரம் செய்திருந்தார் ஜெகன்மோகன் ரெட்டி. அதன்படி அரசு அமைத்த உடனே இந்த தீர்மானத்தை அமுல் படுத்துகிறார்.

மாநில நிதி அமைச்சரும் இதனை உறுதிப் படுத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலில் செய்த பிரசாரத்தின்படி பள்ளி மாணவர்களின் அம்மாக்களுக்கு மட்டுமே வங்கிக் கணக்கில் ரூ.15,000 சேர்க்கப் படும் என்று சொன்னவர் தற்போது இன்டர் படிக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img