மும்பை கனமழை: சுவர் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்த சோகம்!

Published:

mumbai rain4 - 2026 மகாராஷ்டிரத்தில் தென்மேற்குப் பருவமழை கால தாமதமாகத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் குரார் என்ற கிராம பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

mumbai rain3 - 2026

இடிபாடுகளில் மேலும் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், ரூ. 5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப் படுவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, ஒவ்வொரு முறை சுவர் இடிந்து விழும்போதும், சிலர் உயிரிழக்கும் போதும் அரசு வெறுமனே நிதி உதவி மட்டும் அளித்தால் போதாது, பல்வேறு சுவர்கள் இடிந்துவிழும் நிலையில்தான் கட்டப்பட்டுள்ளன. அவற்றைக் கட்டியவர்களை கைது செய்யவேண்டும். கைது செய்தாலும், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விடுகின்றனர். மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் இது போல் இழப்புகள் மேலும் மேலும் ஏற்படத்தான் செய்யும் என்று டிவிட்டர் பதிவுகளில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

Related articles

Recent articles

spot_img