வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா?

vaiko 4 - 2026

திமுக தொடா்ந்த தேசதுரோக வழக்கால் வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா? என்பது 5-ந் தேதி தீர்ப்புக்கு பிறகு தெரிய வரும்.

திமுக தொடர்ந்த வழக்கால் வைகோ எம்.பி.ஆவதில் சிக்கல்
ஏறபட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்- சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் போட்டியின்றி எளிதாக தேர்வு செய்ய முடியும்.

அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

அந்த இடம் அன்புமணிக்கு வழங்கப்படுகிறது. தி.மு.க.வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு 1 இடம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய எழும்பூர் தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெறுகிறது.

இதில் ம.தி.மு.க. வேட்பாளராக பொதுச்செயலாளர் வைகோ பெயர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஆனால் 2009-ம் ஆண்டு வைகோ பேசிய பேச்சே இன்று அவருக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ்- தி.மு.க.வுக்கு எதிராகவும்

அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா 2009-ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.

இதில் வைகோ கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார்.

அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது தேசதுரோக வழக்கு தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்டது.

நீண்ட வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வைகோ முறையிட்டார்.

ஆனால் வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு அறிவித்து விட்டது.

அதன்பிறகு இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 5-ந் தேதி (வெள்ளிக் கிழமை) வெளியாகிறது.

இதில் வைகோ விடுதலையாகிவிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.

மாறாக வைகோவுக்கு 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரால் எம்.பி. பதவிக்கு நிற்க முடியாது.

இதனால் வைகோ எம்.பி.யாக முடியுமா? முடியாதா? என்பது 5-ந் தேதி தீர்ப்புக்கு பிறகு தெரிய வரும்.

1 COMMENT

  1. தி.மு.க. ஆட்சியில் வை.கோ. மீது தொடர்ந்த தேச துரோக வழக்கின் முடிவு வை.கோ.வுக்கு ஆதரவாக இருந்தால்தான் வை.கோ. ராஜ்யசபாவுக்குள் செல்ல முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories