உற்சாகக் கொண்டாட்டம் … போனாலு ஜாத்தர .. ஆரம்பம்!

Published:

jaathra1 - 2026 கோல்கொண்டா கோட்டையில் இந்த வருடத்துக்கான ‘போனாலு ஜாத்தர’ ஆரம்பமானது. இரட்டை மாநகரங்களில் ‘போனாலு ஜாத்தர’ தொடங்கிவிட்டது.

டப்பு மேளங்களின் ஜோர், சாமி வந்து ஆடுவது, ‘போத்த ராஜு’ ந்ருத்தியம் எனும் நாட்டியம், இளைஞர்களின் உற்சாகம்  என நகரத்தில் கோலாகலமாக போனாலு உற்சவம் களை கட்டி விட்டது.

பாக்கிய நகரத்தின் இந்த வருட போனாலு பண்டிகை, கோல்கொண்டா கோட்டையில் கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ ஜெகதாம்பாள் அம்மனுக்கு ஜூலை 4 வியாழன் அன்று தொடங்கியது. இதில், பக்தர்கள் முதலில் போனம் எனப்படும் நைவேத்தியத்தை சமர்ப்பித்து தொடங்கி வைத்தார்கள்.

அதற்கு முன் ‘ டோலீ சௌகீ’ என்ற இடத்திலிருந்து ‘பலகார பண்டி’ ஊர்வலம் தொடங்கியது. அம்மனின் விக்ரகத்திற்கு பூஜாரிகள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின் ‘கடங்கள்’ எனப்படும் அம்பாளின் முகம் எழுதிய குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோட்டை மேலுள்ள அம்மனிடம் சமர்ப்பித்தார்கள்.

jaathra2 - 2026டப்பு வாத்தியங்கள் முழங்கின. சாமி வந்த பலரும் உடலை ஒரு சுழற்று சுழற்றி ஆடினர். போத்து ராஜுக்களின் நாட்டியம், இளைஞர்களின் உற்சாக கூக்குரல், இவற்றின் இடையே போனாலு பண்டிகை கம்பீரமாகவும் தெய்வீகமாகவும் தொடங்கியது! அமைச்சர்கள் இந்திர கிரண்ரெட்டி, தலசானி ஸ்ரீனிவாச யாதவ் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்கள்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

தெலங்கானாவில் கோல்கொண்டா போனாலுவோடு ஆஷாடமாச போனாலு பண்டிகை தொடங்குவது வழக்கம். மாநில அளவில் ஒரு மாத காலம் இந்த உற்சவத்தை நடத்துவார்கள். ஆஷாட மாதத்திலிருந்து சிராவண மாதம் வரை இந்த ஜாத்திரை நடக்கும்.

jaathra3 - 2026இரட்டை மாநகரங்களில் மட்டும் ஆஷாட மாதத்தோடு ஜாத்திரை நிறைவுற்று விடும். ஒவ்வொரு வாரம் நகரத்தின் ஒவ்வொரு இடத்தில் ஒரு மாத காலம் இந்த உற்சவம் நடக்கும். ஹைதராபாத் செகந்திராபாத் இரட்டை மாநகரில் வருடாவருடம் போனாலு ஜாத்திரை மிக கோலாகலமாக நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு வியாழனும் ஞாயிறும் அந்தந்த ஆலயங்கள் உள்ள எல்லையில் அம்மன் கோயில்களில் போனாலு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்படும். போனாலு பண்டிகைக்காக தெலங்கானா அரசு எப்போதும் போலவே மிக விமரிசையாக ஏற்பாடுகளை செய்துள்ளது. காவல் துறையினரின் கண்காணிப்பும் பலத்தப்பட்டுள்ளது.   அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img