வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மறுத்து பிசிசிஐ.,க்கு தோனி கடிதம்! காரணம் இதுதான்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

dhony army dress - 2026

இந்திய அணி அடுத்து மேற்கு இந்தியத் தீவுகளுடன் விளையாட அங்கே சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில், துணை ராணுவப் படையில் அடுத்த 2 மாதங்கள் பணியாற்ற உள்ளதால் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இந்திய அணியில் பங்கேற்க முடியாது என தோனி பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளார். #MSDhoni #Dhoni #TeamIndia #INDvsWI

இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று கூறப் படுகிறது. அதே நேரம், தோனி தேர்வு செய்யப்படுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

வரும் காலங்களில் விக்கெட் கீப்பிங்கில் முதல் தேர்வாக ரிஷப் பண்ட் தான் இருப்பார். அவர் தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள அவகாசம் வழங்கப்படும். தோனியின் வழிகாட்டுதல் அணிக்கு நிச்சயம் தேவை. அவர் அணியில் இருந்து விலகுவது அணிக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. எனவே தோனி 15 வீரர்கள் கொண்ட அணியில் இருப்பார். ஆனால், விளையாடும் பதினோரு பேரில் அவர் இடம்பெறுவது சற்று கடினம்தான்” என்று பிசிசிஐ அதிகாரிகள் கூறி வந்தனர்.

dhony army dress1 - 2026இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறுவதில் இருந்து தோனி ஓய்வு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், “தோனி தற்போது ஓய்வு பெறவில்லை. அவர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் பங்கேற்கவில்லை. 2 மாதம் ஓய்வு கேட்டுள்ளார். ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கும் தோனி இந்த இரண்டு மாத ஓய்வை தனது துணை ராணுவக் குழுவுடன் செலவிட உள்ளார். இந்தத் தகவலை அவர் ஏற்கெனவே தேர்வுக் குழுவுக்கு தெரிவித்து விட்டார்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.