நவபிருந்தாவனத்தை தகர்த்ததாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது!

Published:

vyasaraja brindavan arrest koppal police - 2026

ஹம்பியில் ஸ்ரீ வியாஸராஜரின் நினைவிடத்தை சிதைத்து சின்னாபின்னப் படுத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 நபர்களை கர்நாடக மாநில கொப்பல் போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தியில் வியாசராஜர் பிருந்தாவனம் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஆந்திர மாநிலம் ஆனன்புரா மாவட்டம் தாடாபத்திரி பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசராஜர் பிருந்தாவனம் இருந்த நவ பிருந்தாவனம் பகுதியில் விலை உயர்ந்த பொருள்கள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவற்றை கொள்ளையடிப்பதற்காக இச் செயலில் ஈடுபட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று போலீஸார் கூறினர்.

நவ பிருந்தாவனம் பகுதியில் பெருமளவிலான விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக தங்களுக்கு தெரியவந்ததால் அவற்றை கொள்ளையடிப்ப தற்காக இவ்வாறு ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனராம்.

ஆனேகுந்தி பகுதியில் நவ பிருந்தாவனம் என்ற 9 மாத்வ சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கே அடங்கியுள்ளது! பதினைந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த மாத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த குரு வியாசராஜரின் முக்கிய பிருந்தாவனம் நடுவில் அமைந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சிதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகின

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதைத் தொடர்ந்து ஏராளமானோர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பிருந்தாவனத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது! இந்நிலையில் கொப்பல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரேணுகா சுகுமார் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, பெருமளவில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாக கிடைத்த தகவலால் தாங்கள் அவ்வாறு ஈடுபட்டதாக 6 பேர் கூறியுள்ளனர்!

பாலநரசையா (வயது 42) மற்றும், பொல்லாரி முரளிமனோகர் ரெட்டி (வயது 33), மனோகர் (வயது 27), கும்மத் கேசவ் (வயது 29), விஜயகுமார் (வயது 36) இவர்கள் அனைவரும் இன்னோவா காரில் அந்த பகுதிக்கு வந்து இச் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்களில் பாலநரசையா என்பவர் தாடேபத்திரி பகுதியில் கோயிலில் பூசாரியாக உள்ளார். மனோகர் அந்த வாகனத்தை ஓட்டி உள்ளார். பிருந்தாவனத்தை தகர்ப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய கடப்பாரை கைப்பற்றப்பட்டுள்ளது.. என்றார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img