பயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்!

தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல் வணிகம்

heloapp - 2026இன்று சமூக வலைத்தளங்களில் வளர்ச்சியில் முன்னணியில் நிற்கிறது டிக்டாக் செயலியும், ஹலோ ஆப் செயலியும்.

டிக்டாக் சில நேரங்களில் பிரச்னைக்குரியதாக சிலரால் பார்க்கப் படுகிறது. தமிழகத்தில் இதன் பயனர்கள் விபரீதமான கற்பனைகளை டிக்டாக் செயலி மூலம் பகிர்ந்து, உயிரிழப்பு, விபத்து ஆகியவற்றில் சிக்குகின்றனர் என்று குற்றச்சாட்டு இருந்தாலும், டிக்டாக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் டிக்டாக் மற்றும் Helo ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் தனது பயனாளர்களின் பாதுக்காப்பை மேம்படுத்தும் நோக்கில் தரவு மையத்தை இந்தியாவிற்கு என பிரத்யேகமாக, இந்தியாவிலேயே திறக்க உள்ளது.

tik tok douyin taking the world bytedance feature image 1 - 2026

இதனால் பயனர்களின் தகவல்கள், தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பது இன்னும் பல மடங்கு உறுதி செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,
Helo வின்  ஹோல்டிங் நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance), இந்தியாவில் ஒரு டேட்டா மையத்தை நிறுவுவதற்கான தனது திட்டங்களை அறிவித்து, Helo வின் 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.. என்று கூறியுள்ளது.

#HeloDataProtection #HeloforDigitalIndia

http://m.helo-app.com/al/NcYbvme

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.