jaganmohan - 2026

மொத்தம் நான்கு லட்சம் வேலைவாய்ப்புகள்….. இது ஒரு சாதனை ….. எல்லாம் உங்கள் சாதனை தான் என்கிறார்கள் ஆந்திர வாசிகள்.!

ஆட்சியில் புது உத்திகளுக்கு இடம் அளித்துள்ள ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

கிராம அமைப்பை பலப்படுத்தும் நோக்கி புதிய முயற்சிகளை தொடங்கியுள்ளார் ஜெகன். அதற்காக சில திட்டங்களையும் முன்வைக்க தொடங்கியுள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக ஆட்சிக்கு வந்தபின் எடுத்த முக்கிய முடிவுகள் அதனை பறைசாற்றுகிறது

புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராம அளவில் செயலகங்களை அமைத்து மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தன்னுடைய முத்திரையை சிறப்பாக பதித்து வருகிறார்.

தேர்தலில் அளித்த வாக்குறுதித் திட்டமான நவரத்தினங்களை அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் .

அதில் ஒரு பகுதியாக கிராம தன்னார்வாளர் அமைப்பை தொடங்கினார். ஒவ்வொரு 50 வீடுகளுக்கும் ஒருவர் வீதம் நியமித்து அவர்கள் மூலம் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார். இதன் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன .

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அடுத்து கிராம செயலகங்களைக் கூட அமைத்து வருகிறார்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 13 ஆயிரத்து 68 செயலகங்களை ஏற்பாடு செய்து வருகிறார். ஒவ்வொரு செயலகத்திலும் 10 அதிகாரிகளை நியமிப்பார்கள். இது தொடர்பான வழிமுறைகளை இரு நாட்கள் முன்பு பஞ்சாயத்து ராஜ் கிராம வளர்ச்சித் துறை வெளியிட்டது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெகன் வெளியிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.

அதிவிரைவில் மாநில அளவில் 4 லட்சத்து 61 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. இது ஒரு ரெக்கார்டு என்று ஜெகன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாட்சியில் புரட்சிகரமான மாற்றமாக கிராம செயலகங்களும் தன்னார்வலர் அமைப்பும் நடைமுறைப் படுத்தி வருவதாகவும் இதெல்லாம் மக்களின் ஆசியால் சாத்தியப்படுகின்றன என்றும் டுவிட் செய்துள்ளார்.

IMG 20190722 WA0004 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending