கழிவறையும் ஒரு சமையலறை ! சொல்கிறார் ம.பி. அமைச்சர் !

இந்தியா கல்வி சற்றுமுன் புகார் பெட்டி பொது தகவல்கள்

emarthi devi - 2026மத்திய பிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டம், கரோராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் கழிவறை மேல் வைக்கப்படுவதாகவும், சிலிண்டர் மற்றும் ஸ்டவ் கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை என மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி தெரிவித்துள்ளார்.வீட்டில் குளியலறையுடன் கழிவறை இருப்பதால் உறவினர்கள் தங்களது வீட்டில் சாப்பிட மறுப்பார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.anganvadi - 2026கழிவறைக்கும் சமைக்கும் பகுதிக்கும் இடையே ஒரு தடுப்பு ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிய வேண்டும். ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் நம் அனைவரது வீடுகளிலும் குளியலறையுடன் கூடிய கழிவறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ‘குளியலறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நாம் நமது வீடுகளிலும் பாத்திரங்கள் வைத்திருக்கிறோம். பயன்படுத்தப்படாத பாத்திரங்களை அடுக்கி வைக்கிறோம்.  இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.anganvadi1 - 2026அந்த அங்கன்வாடி மையத்தை தன்னார்வ அமைப்பு பராமரித்து வருகிறது. அங்கு தான் கழிவறை தற்காலிக சமையலறையாக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அங்கன்வாடி மையத்தின் அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி தேவேந்திர சுந்தரியால் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.