சந்தேகித்த கணவன் ! சிறுபெண்குழந்தையோடு மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!

இந்தியா கிரைம் நியூஸ்

jothi - 2026
ஜோதி என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூவிரில் வசித்து வருகிறார். இவர் மாடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் பங்கஜ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஷபுனா என்ற 7 வயது மகள் உள்ளார். ஜோதி மாடல் தொழில் ஈடுபடுவது பங்கஜுக்கு பிடிக்காதிருந்தது. இதனால்  தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

மனைவியின் நடத்தை மேல் சந்தேகம் கொண்ட பங்கஜ் அவரிடம் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை வரவே கோபித்துக்கொண்ட பங்கஜ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மறுநாள் காலையும் அவர் வீடு திரும்பாததால் பயந்துபோன ஜோதி அவருக்குக் கால் செய்துள்ளார். ஆனால் அவர் போன் ஆஃப் ல் இருந்திருக்கிறது. இதனால் விரக்தியடைந்த ஜோதி அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் இருந்து குழந்தையோடு குதித்துத் தற்கொலை செய்துள்ளார்.

இதைப் பார்த்த அபார்ட்மெண்ட் காவலாளி காவல்துறைக்குத் தகவல் சொல்ல சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.