சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது: மோடி வாழ்த்து

Published:

sasi-kapoorமும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார். தற்போது 77 வயதான அவர், ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் திரையுலகில் வலம் வந்தவர். கடந்த 1986–ம் ஆண்டு வெளியான ‘நியூ டெல்லி டைம்ஸ்’ என்ற படத்தில், தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய காரணத்தால், அவருக்கு அப்போது தேசிய விருது வழங்கப்பட்டது. 1993–ம் ஆண்டு வெளியான ‘முகாபிஸ்’ படத்துக்காக ‘சிறப்பு ஜூரி விருது’ மற்றும் 1979–ம் ஆண்டு வெளியான ‘ஜனூன்’ படத்துக்காக ‘தேசிய திரைப்பட விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார். நடிகர் சசி கபூர் இந்திய சினிமா உலகுக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்கு இந்த ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே விருது’ அறிவிக்கப்பட்டு உள்ளது. சசி கபூரின் தந்தை பிரிதிவிராஜ் கபூர், இந்தி திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த நடிகர் ராஜ் கபூர் (சசி கபூரின் சகோதரர்) ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, நடிகர் சசி கபூருக்கும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த விருதைப் பெற்றவர்கள் என்ற சாதனை படைக்கவுள்ளனர்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img