வீடு கட்ட ரூ.5.லட்சம் உதவித்தொகை ! எடியூரப்பா !

ediyurappa e1565680564520 - 2026கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

கடலோர பகுதிகளான  தெற்குகர்நாடகா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. ஆனால் பெங்களூரு உள்பட மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது.தெற்குகர்நாடகா , உடுப்பி, கார்வார், சிவமொக்கா, குடகு, மைசூரு, சிக்க மகளூரு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் வீடு, உடைமைகளை இழந்ததோடு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.ediyurappa 1 - 2026மராட்டிய மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மராட்டிய மாநில எல்லையில் அமைந்து உள்ள வடகர்நாடக மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

அதே சமயம் அங்கு கனமழையும் கொட்டி தீர்த்தது. இதனால் வீடு, உடைமைகளை இழந்த மக்கள் பல்வேறு முகாம்களில் தங்கி உள்ளனர். வடகர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிலையில் தெற்குகர்நாடகா மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூருவுக்கு சென்றார். மங்களூரு அருகே பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில், நளின்குமார் கட்டீல் எம்.பி., மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா ஆகியோர் வரவேற்றனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெல்தங்கடிக்கு சென்ற  எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குக்காவு பகுதியில் உள்ள முகாமில் தங்கி உள்ள 300-க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து எடியூரப்பா ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.ediyuappa 2 - 2026

இந்த சந்தர்ப்பத்தில் சிலர் எங்களது வீடுகள் இடிந்து விட்டதால் வீடுகள் கட்ட உதவிதொகை வழங்க வேண்டும் என்று எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கர்நாடகா முதல்வர் பேசுகையில், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ரூ.5 லட்சம் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் புதிதாக வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் அந்த முகாமில் இருந்து எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.

இதன்பின்னர் பண்ட்வால் பகுதிக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் தர்மஸ்தாலாவுக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகள் குறித்தும், அதனை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.tharmasthala - 2026இதனையடுத்து தர்மஸ்தாலாவில் உள்ள மஞ்சுநாதா கோவிலில் சாமி தரிசனம் செய்த எடியூரப்பா அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அப்போது எடியூரப்பாவிடம் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில் வருகிற 16-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு செல்லவதாக உள்ளேன். எங்கள் கட்சியின் தலைவருடன் ஆலோசித்த பின்னர் புதிய மந்திரிகள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories