February 21, 2026, 10:29 PM
27.3 C
Chennai

பியூஸ் மானுஷ் போல் திமுக., அலுவலகங்களுக்குச் சென்று இவற்றைக் கேட்கலாமா ஸ்டாலின்..? இந்து தமிழர் கட்சி கேள்வி!

stalin - 2026

ஸ்டாலின் அவர்களே!! சொன்னது என்னாச்சு? பியூஸ் மானுஷ் போல் மற்றவர்களும் திமுக., அலுவலகங்களுக்குச் சென்று இவற்றைக் கேட்கலாமா என்று இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் கேள்விகளை எழுப்பியுள்ளார் .

இது குறித்து அவர் தெரிவித்த போது…

சேலத்தில் பாஜக அலுவலகத்தில் மத்திய அரசாங்கத்தின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப் போகிறேன் என்று முகநூலில் நேரலையில் வைத்துக்கொண்டு, கலவரம் செய்யும் உள்நோக்கத்தோடு பாஜக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பொது அமைதியைக் கெடுத்து
“மலிவு விலை விளம்பரம்” தேடிய பியூஸ் மானுஷ் என்கின்ற ஒரு நபருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுகிறார் திமுக., தலைவர் ஸ்டாலின். அவர் தாக்கப்பட்டதாக கண்டனம் தெரிவிக்கிறார்.

பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்…

கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே பியூஸ் மானுஷ் மீதான தாக்குதலை பார்க்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை, அறவழியில் வேரறுப்போம் என்று மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்டாலின் அவர்களே ! இன்று சென்னை புழல் சிறைச்சாலையில் இஸ்லாமிய கைதி பன்னா இஸ்மாயில் பிலால் மாலிக் போன்றவர்கள் சிறைத்துறை எஸ்பி திரு செந்தில் குமார் அவர்களை தாக்கியதற்கு ஏதாவது கண்டன அறிக்கை வெளியீட்டீர்களா? ஏன் வெளியிட வில்லை.?

piyush manush bjp - 2026

அரசியலில் கொள்கை முரண் இருக்குமாயின், அது சம்பந்தமாக முறையான அனுமதி பெற்று ஒரு பொது விவாதம் செய்வதுதான் பக்குவப்பட்ட அரசியல் தலைமையின் பண்பு.

அதை விட்டுவிட்டு அனுமதி இன்றி ஒரு கட்சி அலுவலகத்தில் அத்துமீறி பிரவேசம் செய்து கலவரம் செய்ய வேண்டும் என்கின்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு பொது அமைதியை கெடுக்க வேண்டும் என்கின்ற கெடுமதியுடன் சேலம் பியூஸ் மானுஷ் என்கின்ற நபர் செயல்பட்டிருக்கிறார்.

இவர் செய்தது சரி என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வாரே ஆனால் நாளை தமிழக மக்கள், பாஜகவினர் இந்து இயக்கத்தவர்கள் மற்றும் உங்கள் வாக்குறுதியை நம்பி வாக்களித்த சாதாரண வாக்காளர்கள் யாராவது “பியூஸ் மானுஸ்” போல முகநூலில் நேரலையில் வைத்துக்கொண்டு நாளை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அல்லது ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் இருக்கக்கூடிய திமுக அலுவலகங்களுக்கோ நேரடியாக சென்று கீழ்க்காணும் கேள்விகளை எல்லாம் கேட்டால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் எந்தவிதமான வன்முறையும் இன்றி முறையான, பக்குவமான முறையில் பதில் சொல்ல தயாரா?

தமிழக பாஜகவினர் ஏன் பியூஸ் மானுஷ் எங்கள் ஊருக்கு வர வேண்டும் என்றும், நாங்கள் வரவேற்கக் காத்திருக்கிறோம் என்று ஏன் நீங்கள் பதிவிடவேண்டும்.? அது தேவையில்லாத ஆணி.

நீங்கள் கீழ்க்காணும் கேள்விகளை ஒவ்வொரு திமுக அலுவலகம் சென்று நேரடியாகக் கேளுங்கள்! அப்பொழுது திமுகவினர் அடிக்காமல் திருப்பித் தாக்காமல், ஸ்டாலின் சொன்ன வன்முறையற்ற ஜனநாயக ரீதியில் அமைதியாகவும் பொறுமையாகவும் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்….

*தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி தந்தீர்கள். நாங்கள் வெற்றி பெற்றால் மாதம் ஆறாயிரம் தருவோம் நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னீர்களே ! சொன்னது என்னாச்சு?

*நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று கருணாநிதி சொன்னது என்ன ஆச்சு?

*ஈழத் தமிழரைக் கொன்று குவித்த காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தது ஏன்?

*ஸ்டெர்லைட்டுக்கு கையெழுத்து போட்டு அனுமதி வழங்கி விட்டு ஸ்டெர்லைட் மூடுங்கள் என்று போராட்டத்தை தூண்டி விடுகிறீர்களே ஏன்?

*ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற நாங்கதான் கையெழுத்து போட்டோம் என்று டி ஆர் பாலு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் சொன்னார்களே இதுகுறித்து சொன்னது என்னாச்சு?

*மதுவிலக்கு பூரணமாக கொண்டுவருவோம் என்று சொன்னீர்களே !
எப்பொழுது அமல்படுத்துவீர்கள்? உங்கள் திமுகவினர், குடும்பத்தினரால் நடத்தப்படும் சாராய ஆலைகள் மூடப்படுவது எப்போது? பூரண மதுவிலக்கு சொன்னது என்னாச்சு?

*பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் முஸ்லிம் கிறிஸ்தவ பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்றீங்களே ஏன்?

*திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான் இருக்கிறார்கள் என்று சொன்னீர்களே! இன்று திமுக இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? நீங்கள் சொன்னது என்னாச்சு?

*மாரிதாஸ் என்கிற நபர் முகநூலில் கேட்ட கேள்விக்கு போலீசில் புகார் தெரிவித்தது ஏன்? நாளை மாரிதாஸ் போன்ற நபர்கள் அண்ணா அறிவாலயம் வந்து இதேபோன்று தங்களிடம் கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல தயாராக இருக்கிறீர்களா? ஸ்டாலின் அவர்களே!

*மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் எடுத்த உறுதியான நடவடிக்கையை ஆதரிக்காமல், எதிர்த்து விட்டு பின்னர் அதை சமாளிக்க நடந்து கொண்ட நடைமுறைதான் தவறு என்று பல்டி அடித்ததுஏன்? முன்பு நீங்கள் பேசிய பேச்சு என்னாச்சு?

*இந்தி ஆதிக்கம் வேண்டாம் என்று சொல்லி தேர்தல் சமயத்தில் இந்தியில் பிரச்சாரம் செய்து தமிழர்களை முட்டாளாக்கியது ஏன்?.

இதுபோன்று இன்னும் பல கேள்விகள் உள்ளன. தயார் செய்துகொண்டு மற்றவர்கள் அனைவரும் பியூஸ் மானுஷ் பாணியில் சென்று கேள்வி கேட்க வேண்டும். தயாராகுங்கள்.

அப்பொழுது இவர்கள் யோக்கியதை என்னவென்று தமிழக மக்கள் அறிந்து கொள்வார்கள்; புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார் ராம.ரவிக்குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories