இம்ரான் தன்னை அவமானப் படுத்திக் கொள்கிறார்! வறுத்தெடுக்கும் கிரிகெட் வீரர்கள்!

Published:

imran - 2026

ஐ.நா.,வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்கு பல கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதுடன், இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் உள்ளதாக கூறினார். இதற்கு ஐ.நா.,வில் இந்தியா பதிலடி கொடுத்தது.

இம்ரானின் பேச்சுக்கு, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் முகமது ஷமி, ஹர்பஜன் சிங் இர்பான் பதான் , வீரேந்திர சேவக் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்..

முகமது ஷமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அமைதி, அன்பு ஆகியவற்றை, மஹாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுவதும் பரப்பினார். இம்ரான் கான், ஐ.நா.,வில் அச்சுறுத்தும் வகையிலும், வெறுக்கத்தக்க வகையிலும் பேசினார்.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி பற்றி பேசும் பிரதமர் தான் பாகிஸ்தானுக்கு தேவை. பயங்கரவாதம் போர் குறித்து பரப்புபவர் தேவையில்லை எனக்கூறியுள்ளார்.

criket - 2026

ஹர்பஜன் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஐ.நா.,வில் இந்தியாவுடன் அணு ஆயுத போர் வாய்ப்பு உள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.
சிறந்த விளையாட்டு வீரரான இம்ரான் கான் பேச்சு ரத்த பாதை வார்த்தை, இறுதி வரை போர் போன்ற வார்த்தைகள் இரு நாடுகளுக்கு இடையில் வெறுப்பைத் தான் அதிகரிக்கும். விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில், அவரிடம் அமைதி பரப்புவதை எதிர்பார்க்கிறேன் எனக்கூறினார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

விரேந்திர சேவக் வெளியிட்ட டுவிட்டர் பதிவில். சில நாட்களுக்கு முன்னர் மோசமாக பேசிய இம்ரான் கான், தற்போது தன்னை தானே இழிவுபடுத்தி கொள்ள புதிய வழிகளை கண்டுபிடித்து கொள்கிறார் எனக்கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவில் இம்ரான் பேட்டி அளித்த வீடியோ காட்சி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

sehvag - 2026

அந்த வீடியோவில் இம்ரான் கூறும்போது, நீங்கள் சீனா சென்று பாருங்கள். அங்கே உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்கும். நியூயார்க் நகரில், கார்கள் குதித்து குதித்து செல்கின்றன என்றார். இதற்கு, அமெரிக்கர்கள் பலர், இம்ரானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

சேவக் டுவீட்டுக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலியும், டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.அந்த பதிவில், கங்குலி கூறியதாவது: விரு, இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற பேச்சை கேட்டதுஇல்லை. உலகத்திற்கு அமைதி தேவைப்படுகிறது. பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கு அமைதி தேவைப்படுகிறது.

இம்ரானின் பேச்சு குப்பை போன்று உள்ளது. இம்ரான் கான் கிரிக்கெட் வீரர் என்பது உலகத்திற்கு தெரியும். அவரது பேச்சு மோசமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img