Dhinasari Home page

டிவிட்டரில் சு.சுவாமி கமல்ஹாசன் வாக்குவாதம்: கமலுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

News சற்றுமுன் சென்னை

சென்னை:
ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மாணவர்களை இளைஞர்களை சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து முதல்வர் பன்னீர் செல்வம் சந்தித்து சமாதானப் படுத்தியிருந்தால், இந்த வன்முறை வெடித்திருகாது என்ற ரீதியில் நடிகர் கமல்ஹாசன் ஒரு கருத்தைப் பதிவிட்டார் தனது டிவிட்டர் பக்கத்தில்.

 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சுப்பிரமணியம் சுவாமி, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கச் சென்ற பன்னீர்செல்வத்துக்கு என்ன மரியாதை கிடைத்தது என்று பார்த்தீர்கள் அல்லவா, அதையும் மீறி அவர் மெரினாவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறாரா கமல்ஹாசன் என்று கேலியாகப் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் சுவாமியின் கருத்துக்கு தான் பதில் கருத்து எதுவும் சொல்லப் போவதில்லை என்று கமல் ஹாசன் டிவிட்டரில் பதிலளித்தார்.

 

இருவரும் டிவிட்டரில் கருத்து யுத்தம் நடத்திக் கொண்டிருந்த பின்னணியில், இன்று மாலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். ஜல்லிக்கட்டு தொடர்பாக, கமல் தொடர்ந்து கருத்துகளை பதிந்து வரும் நிலையில், அவருக்கு இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.